ADDED : ஆக 09, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில், சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி கல்வி குழுமம் சார்பில், மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது.
விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு, மாணவர்களிடையே பேசுகையில், கல்வியின் சிறப்புகள் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினார். முன்னதாக, மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியை, கலெக்டர் பார்வையிட்டார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சி.இ.ஓ., அறிவழகன் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஓ.எம்.ஆர். செயின்ட் ஜோசப் கல்வி குழும பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

