ADDED : செப் 25, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி நடந்தது. முட்டத்துாரில்
நமது சிலம்பம் அறக்கட்டளை மற்றும் ஆர்.எஸ்., பொது நல டிரஸ்ட் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான போட்டிக்கு சிலம்பம் அறக்கட்டளை நிறுவனர் சுரேந்தர் சண்முகம் தாங்கினார். முட்டத்துார் மற்றும் சுற்றுப்புற19 கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்களது தனி திறன்களான களிமண் ஓவியம், கைவினை பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கி படைப்புகளை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேவா பாரதி சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் சரவணன், டிரஸ்ட் நிறுவனர் சிவசக்தி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். சேவை கரங்கள் ஒருங்கிணைப்பாளர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
