/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் துவங்குவது... எப்போது: மாவட்ட இளைஞர்கள் ஆவலுடன் காத்திருப்பு
/
விழுப்புரத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் துவங்குவது... எப்போது: மாவட்ட இளைஞர்கள் ஆவலுடன் காத்திருப்பு
விழுப்புரத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் துவங்குவது... எப்போது: மாவட்ட இளைஞர்கள் ஆவலுடன் காத்திருப்பு
விழுப்புரத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் துவங்குவது... எப்போது: மாவட்ட இளைஞர்கள் ஆவலுடன் காத்திருப்பு
ADDED : ஆக 28, 2025 05:44 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைந்துள்ள நுாலகத்தில் குரூப் 2 தேர்வர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்பு மையத்தை விரைந்து துவங்க கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் அருகே வழுதரெட்டியில் மறைந்த முன்னாள் வேளாண் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கம், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு, சமூக நீதி போராளிகள் மணிமண்டபம் மற்றும் நுாலகமும் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
இவற்றை கடந்த ஜன., 28ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை கடந்த ஜூலை, 26 ம் தேதி வன்னியர் பொதுச்சொத்து நலவாரிய தலைவர் ஜெயராமன், வன்னியர் நல வாரிய உறுப்பினர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள நூலகத்தில், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான நுால்களை கண்டு வாரியத் தலைவர் ஜெயராமன் வியந்தார். மேலும், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நுால்களை வழங்கியதற்காக அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., விற்கு அவர் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜெயராமன் கூறுகையில், 'தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல தேசிய நெடுஞ்சாலையில், மணி மண்டபத்தில் நுாலகம் அமையவில்லை. இங்கு அமைந்துள்ள நுாலகம் மிக சிறப்பாக உள்ளது.
இந்த மணிமண்டபத்தில் உள்ள நுாலகத்தில் மிக விரைவில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் 2 , 2ஏ போன்ற தேர்வுகளை எழுதுபவர்களுக்கு, சென்னையில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ்., அகாடமி மூலம் விரைவில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்படும். அதற்கான கட்டமைப்புகள் இந்த நுாலகத்தில் அமைந்துள்ளன. மேலும் சில கட்டமைப்புகள் தேவை உள்ளதால் இன்னும், 15 நாட்களில் போட்டி தேர்வுகளுக்கான மையம் துவங்கப்படும்,' என்றார்.
ஆனால் இதுவரை கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அமைந்துள்ள நுாலகத்தில் அரசு தேர்வு பயிற்சி மையம் துவங்கப்பட படவில்லை. அதனால் விரைவில் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு மையத்தை துவங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.