/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்
/
அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்
அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்
அ.தி.மு.க., கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., நிர்வாகி மீது புகார்
ADDED : மார் 06, 2024 02:17 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஓ.பி.எஸ்., வருகையையொட்டி அ.தி.மு.க., கட்சிக்கொடி பயன்படுத்திய ஓ.பி.எஸ்., அணி ஒன்றிய செயலாளர் மீது திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 45; ஆடிட்டர்.
இவர், ஓ.பி.எஸ்., அணியில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது வீடு புதுமனை புகுவிழா இருவேல்பட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.
அதனையொட்டி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அவரது வீட்டிற்கு நேற்று மாலை வருகை தர இருந்தார்.
அதனையொட்டி அவரை வரவேற்க அரசூர் கூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க., கட்சிக் கொடி மற்றும் அ.தி.மு.க., வர்ண பேனர் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்திரவை மீறி அ.தி.மு.க., கட்சிக் கொடிகளை பயன்படுத்திய ராஜிவ்காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.