ADDED : நவ 01, 2024 06:27 AM
அ நிறம் | அளவு
குண்டும் குழியான சாலை
விழுப்புரம் மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்லும் சாலை பெயர்ந்து குண்டும், குழியாக மாறியதால் மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர்.
கண்ணதாசன், மகாராஜபுரம்.
சாலை கும்மிருட்டு
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு தேவநாதசுவாமி நகர் விரிவாக்கத்தில், மின் கம்பங்கள் இருந்தும் விளக்கு இல்லாததல் சாலை இருண்டு கிடக்கிறது.
சங்கர், தேவநாதசுவாமி நகர்.
பள்ளி மாணவர்கள் அவதி
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கழிவறைக்கு தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் உள்ளது.
தங்கராஜ், தியாகதுருகம்.
