ADDED : ஆக 27, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: காணை அடுத்த அடங்குணம் கிராமத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அடங்குணம், மாரியம்மன் கோவில் தெருவில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் சாலையிலேயே வழிந்தோடுகிறது. குளம்போல் தேங்கும் கழிவு நீரால் கொசு பரவலால் நோய் தொற்றுக்கு காரணமாகிறது. சாலையில் மக்கள் நடந்த செல்ல முடியவில்லை. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தெருவில் புதிய சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
