தி.மு.க., எம்.எல்.ஏ., மீது த.வெ.க., நிர்வாகிகள் எஸ்.பி.,யிடம் புகார்
தி.மு.க., எம்.எல்.ஏ., மீது த.வெ.க., நிர்வாகிகள் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : செப் 13, 2026 08:52 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க., எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்கக்கோரி த.வெ.க., துணைச் செயலாளர் கனிமொழி கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
மனு விபரம்:
கடந்த 12ம் தேதி கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் விஜய் மற்றும் த.வெ.க., குறித்து மிகவும் தரம் தாழ்ந்தும், அவதுாறாகவும் பேசியுள்ளார்.
மேலும், அவர் தனது உரையில், வன்முறையைத் துாண்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தும் வகையிலும் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது போன்ற அச்சுறுத்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், தமிழகம் முழுதும் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இரு தரப்பினரிடையே மோதலைத் துாண்டும் நோக்கிலும் செயல்பட்ட வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதும் அவதுாறாக பேசிய தி.மு.க.,. துணை பொதுச் செயலாளர் ராசா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
