ADDED : பிப் 11, 2026 03:58 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் பயிலரங்கம் நடந்தது.
தாளாளர் சரவணன் தலைமை தாங்கி, கணினி அறிவியல் பேட்ரான் போன்ற கணினி அறிவியல் இருந்த பழைய மொழிகள் பற்றி கூறினார்.
கணினி அறிவியல் துறை மாணவி வர்ஷா வரவேற்றார். பயிலரங்கத்தின் நோக்கவுரையை முதல்வர் அன்பழகன் கூறினார்.
பேராசிரியர் மணிமாறன், தரவு பகுப்பாய்வு குறித்தும், கணினி உலகில் பல்வேறு மென்பொருள் உருவாக்கும் மாணவர்களாகிய நீங்கள் பல்துறை அறிவோடு பல்வேறு கோடிங் மொழிகளை தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு கற்றுகொள்ள வேண்டும்.
இந்த துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளது என பேசினார். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார்.
