வானுார் அரசு கல்லுாரியில் கணினி அறிவியல் மன்ற விழா
வானுார் அரசு கல்லுாரியில் கணினி அறிவியல் மன்ற விழா
ADDED : ஜன 23, 2026 06:05 AM

அ நிறம் | அளவு
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணினி அறிவியல் மன்ற விழா நடந்தது.
கணினி அறிவியல் துறை தலைவர் அருள்முருகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, கணினி அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்பத்தில் சவாலாகவும், போட்டி அதிகம் இருப்பதால் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என பேசினார். சிறப்பு விருந்தினர்கள் வானுார் டைடல் பார்க் திறன் பயிற்றுநர்கள் சீனுவாசன், விக்னேஷ் பேசினர்.
நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கணினி அறிவுத்திட்ட பயிற்றுநர் ஆரோக்கியநாதன் நன்றி கூறினார்.
