/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலிண்டர் தீப்பிடித்ததால் பள்ளியில் பரபரப்பு
/
சிலிண்டர் தீப்பிடித்ததால் பள்ளியில் பரபரப்பு
ADDED : ஜூலை 17, 2025 12:26 AM
செஞ்சி : செஞ்சி அருகே பள்ளியின் சத்துணவு சமையல் கூடத்தில் சிலிண்டர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி அடுத்த ஆர்யம் பாடி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இதில் 24 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள சத்துணவு சமையல் கூடத்தில் பகல் 12:30மணியளவில் காஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்தது.
அந்த நேரம் கேஸ் ஏஜென்சியை சேர்ந்த ஊழியர் அதே பகுதியில் சிலிண்டர் டெலிவரி செய்து கொண்டிருந்தார்.
அவர் உடனடியாக பள்ளிக்கு வந்து தீயை அணைத்தார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த செஞ்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.