/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதுகலை விரிவாக்க மைய மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்
/
முதுகலை விரிவாக்க மைய மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்
முதுகலை விரிவாக்க மைய மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்
முதுகலை விரிவாக்க மைய மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்
ADDED : ஜூலை 18, 2025 05:03 AM
விழுப்புரம்: விழுப்புரம் முதுகலை விரிவாக்க மைய மாணவர் சேர்க்கை குறித்து, அண்ணாமலை பல்கலை அறிவிப்பு வெளியிடாததால் குழப்பம் நீடித்து வருகிறது.
அண்ணாமலை பல்கலையில் மே மாதம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் சேர்க்கை நடப்பது வழக்கம்.
இந்தாண்டு, விழுப்புரம் முதுகலை விரிவாக்க மையத்தை தவிர்த்து அண்ணாமலை பல்கலைக்கு உட்பட்ட மற்ற கல்லுாரிகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை கண்டித்து, விழுப்புரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை முதுகலை விரிவாக்க மையத்தில் கடந்த, 3ம் தேதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனை குறித்து பல்கலை நிர்வாகம், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த, ஜூலை 14ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால் விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து, விழுப்புரம் முதுகலை விரிவாக்க மைய மாணவர்கள், இங்கு கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கடந்த, 16ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என நிர்வாகத்தினர் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
அன்றைய தினத்திலேயே, பொன்முடி எம்.எல்.ஏ., விழுப்புரம் முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக உயர்கல்வி துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முதல்வரின் அனுமதி பெற்று மாணவர் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், முன்பே அறிவித்தபடி நேற்று அ.தி.மு.க., சார்பில், சண்முகம் எம்.பி., தலைமையில், விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனாலும், உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும்
பல்கலை சார்பில், நேரடியாக மாணவர் சேர்க்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையே நேற்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தகவலை சமூக வலைதளத்தில் தி.மு.க., ஆதரவாளர்கள் பகிர்ந்துள்ளனர்.