/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் பொன்முடி படம் போடுவதில் குழப்பம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் 'குஸ்தி'
/
அமைச்சர் பொன்முடி படம் போடுவதில் குழப்பம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் 'குஸ்தி'
அமைச்சர் பொன்முடி படம் போடுவதில் குழப்பம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் 'குஸ்தி'
அமைச்சர் பொன்முடி படம் போடுவதில் குழப்பம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் 'குஸ்தி'
ADDED : ஏப் 01, 2025 04:25 AM
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் ஒரு சேர பதவி வகித்தவர் மஸ்தான். கட்சி தலைமைக்கு மஸ்தான் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் தலையீட்டால், மஸ்தானின் அமைச்சர் பதவி, மாவட்டசெயலாளர் பதவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வகித்து வந்த பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டது.
மஸ்தான் அமைச்சராக இருந்த போது, வடக்கு மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி விழாக்களில் சீனியர் அமைச்சர் பொன்முடி படம் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் சில இடங்களில் மாவட்ட அமைச்சர் என்ற நிலையில் பொன்முடியின் படம் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் மஸ்தானுக்கு கட்சி தலைமை மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை வழங்கியது. இதன் பிறகு மாவட்ட பொறுப்பு அமைச்சர் பொன்முடி என்று அறிவித்திருந்த நிலையில், பலர் தி.மு.க. விழாக்களில் மஸ்தான் படத்தை முன்னிலைப்படுத்தி, பொன்முடியின் படத்தை போடாமல் விழாவை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டில் தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நோட்டீசில் பொன்முடி படம் இடம் பெற்றிருந்தது.
இதற்கு மஸ்தான் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து. ஏன் பொன்முடி படத்தை போட்டீர்கள் என மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் கட்சி தலைமை வரை புகாராக சென்றது.
கட்சி தலைமையும், மாவட்ட அமைச்சர் பொன்முடி படத்தை போட வேண்டும் என அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து கூட்டேரிப்பட்டு விழாவில் இறுதியாக நோட்டீசில் பொன்முடி படம் இடம் பெற்றிருந்தது.
இந்த விவகாரம் பொன்முடியின் கவனத்திற்கு அவரது ஆதரவாளர்கள் எடுத்து சென்ற நிலையில், ஏற்கனவே பொன்முடி, தனது சொந்த தொகுதியான விழுப்புரத்தை தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ., லட்மணனுக்கு கட்சி தலைமை வாரி வழங்கியதில் கடும் அதிருப்பதியில் உள்ளதால், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் தன்னுடைய படம் இடம் பெறாமல் உள்ள பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்கி கொண்டார்.

