ADDED : ஆக 15, 2026 03:24 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: மேல்மலையனுாரில் காங்., சார்பில் தொகுதி மறுவரையறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறையை கண்டித்து வளத்தி, மேல்மலையனுாரில் ஆர்ப்பாட்டம் நடந்து. மாவட்ட தலைவர் ரங்கபூபதி தலைமையில் ஊர்வலம் நடத்தியும், மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டம், வட்டார நிர்வாகிகள் சண்முகம், ஹரி, சேட்டு, சூரியமூர்த்தி, குமார், மண்ணாங்கட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
