/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
/
விளையாட்டு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 14, 2025 11:20 PM

திண்டிவனம்,:திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பாராட்டினார்.
திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் ரெட்டணை, கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கோ கோ மற்றும் கபடி போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
தடகள போட்டியில் மாணவி ஜிவிதா 3000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், ஆண்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் விஷ்ணு இரண்டாமிடமும் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.மேலும், மாணவி தர்ஷினியா 800 மீட்டர் ஓட்டத்தில் முன்றாம் இடத்தையும், மாணவர் ஜெயராஜ் நீளம் தாண்டுதலில் மூன்றாமிடத்தையும், சித்தார்த், சிலம்பம் தொடு போட்டியில் மூன்றாமிடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சண்முகம், முதல்வர் சந்தோஷ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.