/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 12, 2025 06:26 AM

திண்டிவனம் : மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு மற்றும் விழுப்புரம் மாவட்ட சிலம்பம் கழகம் சார்பில், விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதிதமிழன் வீரகலை சிலம்பம் அறக்கட்டளை மாணவர்கள் கலந்து கொண்டனர். 30 முதல் 40 கிலோ எடை பிரிவில், தொடுமுறை மற்றும் தனித்திறமையில், முதல் இடத்தில், 6 மாணவர்களும், இரண்டாம் இடத்தில் 2 பேர், நான்கு பேர் மூன்றாம் பரிசு என 12 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோஷணை சேலார் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளியின் தலைமையாசிரியர் முத்துவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதில், ஆதிதமிழன் வீரகலை சிலம்பம் அறக்கட்டளை தலைமை பயிற்சியாளர் அருள்முருகன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.