/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போன் நேரு பள்ளி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

ADDED : டிச 26, 2024 06:14 AM

திருவெண்ணெய்நல்லுார்: மாவட்ட அளவில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போன் நேரு மேல்நிலைப்பள்ளி தாளாளர் வாசுதேவன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தமிழக விளையாட்டு துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு 18 வயது உட்பட்ட மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டது.
அதில் திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரஞ்சித் சபாபதி தங்கப்பதக்கம் வென்று மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர் புவனேஸ்வரன் வெள்ளி பதக்கம் வென்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 19 வயது உட்பட்டவர் பிரிவில் 12 ம் வகுப்பு மாணவர் விக்னேஷ் வெள்ளி பதக்கம் வென்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பள்ளி தாளாளர் வாசுதேவன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பள்ளி நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன், இணை இயக்குனர் மருத்துவர் வைபவ், உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.