/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : அக் 28, 2024 10:46 PM

திண்டிவனம் : வடக்கு மாவட்ட காங்., ஓ.பி.சி., மற்றும் வர்த்தக பிரிவு தொழிற்சங்கம், இளைஞர் காங்., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, ஓ.பி.சி., பிரிவு தலைவர் கோவிந்தன், வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் மதன்குமார் தலைமை தாங்கினர். ஓ.பி.சி., மாநில பொது செயலாளர் மணி வரவேற்றார். கூட்டத்தில், காங்., மாநில துணைத் தலைவர் செஞ்சிரங்கபூபதி, சட்டத்துறை செயலாளர் சத்தியராஜ், வர்த்தகர் பிரிவு ராமசாமி, தணிகாசலம், பேச்சாளர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், திண்டிவனத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பெயரை வைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.