ADDED : பிப் 07, 2026 04:42 AM

விழுப்புரம்: மத்திய அரசை கண்டித்து, மத்திய மாவட்ட காங்., சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். தமிழ்நாடு காங்., துணைத் தலைவர் குலாம்மொய்தீன், அகில இந்திய காங்., உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம் ஆகியோர் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்க நினைக்கும் பா.ஜ., அரசை கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சேர்மன் வாசீம் ராஜா, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரீட்டா, லதா, பீட்டர், நாராயணசாமி, முருகன், வினோத்குமார்.
துணைத் தலைவர்கள் ராஜ்குமார், குப்பன், பொதுச் செயலாளர் விஸ்வநாதன், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் சேகர் இளைஞர் காங்., தலைவர் நிவேஷ், முன்னாள் தலைவர் ஸ்ரீராம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் மனு அளித்தனர்.

