/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார்
/
நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார்
நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார்
நேரு, காந்தி மீது அவதுாறு போலீசில் காங்., கட்சி புகார்
ADDED : ஜன 04, 2025 05:18 AM
திண்டிவனம்: முன்னாள் பிரதமர் நேரு மற்றும் காந்தி ஆகியோரை சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பி வருபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் போலீசில் காங்., கட்சியின் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட பொது செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் பர்வீன்பானு, அஜீஸ், கோபாலகிருஷ்ணன், உள்ளிட்டவர்கள் நேற்று புகார் கொடுத்தனர்.
அதில்,'' சரத் பாலாஜி என்பவர் சமூக வலைதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு, மற்றும் மகாத்மாகாந்தி ஆகியோர் பற்றி அவதுாறு கருத்துக்களை பேசிவருகிறார்.
அவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.