/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மன்மோகன் சிங்கிற்கு காங்.,கட்சியினர் அஞ்சலி
/
மன்மோகன் சிங்கிற்கு காங்.,கட்சியினர் அஞ்சலி
ADDED : டிச 27, 2024 11:22 PM

செஞ்சி; செஞ்சியில் காங்., சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.
செஞ்சி கூட்ரோட்டில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் படத்திற்கு நகர காங்., சார்பில் நகர தலைவர் சூர்யமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் சீனுவாசன், முனுசாமி, சேகர், மணியன், ராஜா, ஜான் பாஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி வட்டார காங்., மாவட்ட விவசாய பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு சார்பில் செஞ்சி பஸ் நிலையம் எதிரே மன்மோகன்சிங் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வட்டார தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். வல்லம் வட்டார தலைவர் இளவழகன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜோலாதாஸ், சிறுபான்மையினர் தலைவர் சையத் மாலிக், நிர்வாகிகள் சம்பத், அரங்கசிவக்குமார், வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் கிராமத்தில் அனைத்து கட்சி சார்பில் முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.