/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மன்மோகன்சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி
/
மன்மோகன்சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் அஞ்சலி
ADDED : டிச 27, 2024 11:28 PM

விழுப்புரம், ; விழுப்புரத்தில் காங்., கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயில் பகுதி மற்றும் நான்குமுனை சிக்னல் சந்திப்பிலும் மன்மோகன்சிங் உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
நகர காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
நிரந்தர அழைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ஸ்ரீராம், எஸ்.சி., மாவட்ட தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் விஸ்வநாதன், பாரிபாபு, இளைஞர் காங்., தொகுதி தலைவர் பிரபாகரன், ரமணன், நகர நிர்வாகிகள் சுந்தர், பழனி, பாஸ்கர், மகளிரணி விட்டோபாய், கலியபெருமாள், தொகுதி தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்., துணை தலைவர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.