/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காங்., சொத்து பாதுகாப்பு மீட்பு குழு விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு
/
காங்., சொத்து பாதுகாப்பு மீட்பு குழு விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு
காங்., சொத்து பாதுகாப்பு மீட்பு குழு விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு
காங்., சொத்து பாதுகாப்பு மீட்பு குழு விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு
ADDED : ஜூன் 10, 2025 10:17 PM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு காங்., கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு காங்., கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தலைமையிலான குழுவினர், நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கண்டமங்கலம், வளவனுார், விழுப்புரம் மருதுார், ஆஞ்சநேயர் கோவில் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள காங்., கட்சிக்கு சொந்தமான பாரம்பரிய இடங்கள், பழைய அலுவலக கட்டடங்கள் போன்றவற்றை குழுவினர் நேரில் பார்த்து, அதன் தற்போதைய நிலை குறித்து விசாரித்தனர்.
தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள காங்., கட்சிக்கு சொந்தமான இடங்களின் நிலை, அதனை மீட்பது, பாதுகாப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
சொத்து பாதுகாப்பு மீட்புக்குழு இணை செயலாளர் நிதின்கும்பல்கர், தமிழக காங்., பொது செயலாளர் செல்வம், அகில இந்திய காங்., உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன், விழுப்புரம் மாவட்ட தலைவர் சீனிவாசகுமார், துணை தலைவர் ராஜ்குமார், விழுப்புரம் இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம், மாநில செயலாளர் தயானந்தம், நகர செயலாளர் செல்வராஜ், சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாவட்ட பொது செயலாளர்கள் சீனிவாசன், முபாரக்அலி, எஸ்.சி., அணி தலைவர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், தொழிற் சங்க பிரிவு ஐயனார் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, விழுப்புரத்தில் உள்ள காந்தி, ராஜீவ், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.