ADDED : மார் 15, 2024 12:05 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். நகர தலைவர் பாரிபாபு வரவேற்றார். பொருளாளர் புஷ்பராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், நாராயணசாமி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் முகமது இம்ரான், மாநில பொதுக்குழு வினோத் கண்டன உரையாற்றினர்.
இளைஞர் காங்., தொகுதி தலைவர் பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர்கள் மணிகண்டன், சுரேஷ், ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், பொதுக்குழு தன்சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து ஆணவமாக பேசியதாக பா.ஜ., எம்.பி., அனந்த்குமார் ெஹக்டேவை கண்டித்தும், இந்திய அரசியலமைப்பின் மீது பா.ஜ., தொடுக்கும் வெளிப்படையான தாக்குலை கண்டித்தும் கண்டன உரையாற்றினர்.

