ADDED : செப் 01, 2026 07:51 PM
செஞ்சி: செஞ்சியில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செஞ்சியில் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் தேர்வுக்கான மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாளர் பொறுப்பாளர் மோகன் குமாரராஜா விருப்ப மனு பெற்று, நிர்வாகிகளின் கருத்துகளை பதிவு செய்தார்.
மாலை 5:00 மணிக்கு கூட்டம் முடிந்ததும் திடீரென ஊர்வலமாக சென்று திருவண்ணாமலை சாலையில் இந்தியன் வங்கி எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், ராகுல் எம்.பி., மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் குலாம் மெய்தீன், ரமேஷ், தனுசு, ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் வினோபா, நிர்வாகிகள் உதயானந்தன், தினகரன், சூர்யமூர்த்தி, சண்முகம், மண்ணாங்கட்டி, ராஜவேலாயுதம், சிவா, கார்த்திக், குமார், வரதராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
