ADDED : டிச 20, 2025 06:56 AM

செஞ்சி: செஞ்சியில் பா.ஜ., அரசை கண்டித்து காங்., கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்., முன்னாள் தலைவர் சோனியா, எதிர்கட்சித் தலைவர் ராகுல் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்ற பத்திரிகையை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்து நிராகரித்தது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும், பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து செஞ்சியில் காங்., கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சீனிவாசன், சையத் மாலிக், ஜோலாதாஸ், ராஜா, அன்பு செழியன், ஷபீர், பரமசிவம், ஜான் பாஷா, முத்துலட்சுமி, லட்சுமி, துரை, மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பிரதமர் மோடி, கண்டித்தும், பா.ஜ., அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
