ADDED : செப் 28, 2026 07:01 PM
திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரங்கபூபதி தலைமை தாங்கினார்.
விழுப்புரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மோகன் குமாரராஜா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் கட்சி நிர்வாகிகள் திடீரென தலைமை தேர்தல் அதிகாரியின் உருவ படத்தை அவமரியாதை செய்தனர்.
இதை தடுக்கச் சென்ற போலீசாருக்கும், காங்., கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டம் காரணமாக திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் போக்குவரத்து பாதித்தது.
