தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 03, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:  உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், மாநில மீனவரணி கனகராஜ், பொதுச்செயலர்கள் முபாரக், காஜாமொய்தீன், துணை தலைவர் ராஜ்குமார், இளைஞர் காங்., மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், மாநில பொதுக்குழு நாராயணசாமி, கவுன்சிலர் சுரேஷ்ராம் முன்னிலை வகித்தனர். 

இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், ராகுல் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி, உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்தும், பா.ஜ., துாண்டுதலின் பேரில் போட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிளா காங்., மகேஷ்வரி, இளைஞரணி துணை தலைவர் மதியழகன், ஊடக பிரிவு பிரபாகரன், வட்டார நிர்வாகிகள் அய்யப்பன், செல்வராஜ், மணிகண்டன், ரமேஷ், வெற்றிவேல், சத்தியசீலன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us