/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும் நிலையில் காங்கிரஸ்காரர்கள் கட்சி மாறுகின்றனர் விழுப்புரத்தில் தி.மு.க., அமைப்பு செயலாளர் வேதனை பேச்சு

ADDED : பிப் 17, 2024 06:28 AM

விழுப்புரம் : 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற உள்ள நிலையில் காங்கிரஸ்காரர்கள் காலையில் ஒரு கட்சி், மாலையில் ஒரு கட்சி என மாறுகின்றனர்' என தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி பேசினார்.
விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில், நேற்று இரவு நடந்த 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வரும் ஏப்ரல் 16ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 60 நாள்கள் மட்டுமே உள்ளதால், உடனே தேர்தல் பணியை தொடங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில், பிரதமர் மோடியின் துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசுவதெல்லாம் பொய். மோடி, விலைபோன ஊடகங்களை மட்டும் நம்புகிறார்.
தமிழகத்தில் கடந்த 2016ல் நடந்த தேர்தலின்போது கன்டெய்னரில் 570 கோடி ரூபாயை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்தனர்.
தி.மு.க., உள்ளிட்ட எதிர் கட்சிக்காரர்களிடம் அமலாக்கத் துறையை அனுப்பும் மத்திய அரசு, ஏன் 570 கோடி ரூபாய் யாருடையது என 8 ஆண்டுகளாக கண்டுபிடிக்கவில்லை. அது மோடி பணமாக இருக்கலாம் என சந்தேகம் வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறும் என எதிர்பார்த்தோம். கருணாநிதியும் மிகவும் நம்பினார். அப்போது அவர்கள் நம் கூட்டணிக்கு வந்திருந்தால் ஆட்சி அமைத்து இருக்கும். கருணாநிதியும், ஜெயலலிதா, விஜயகாந்த்தும் கூட, உயிருடன் இருந்திருப்பார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., விலைக்கு வாங்கியுள்ளது. இப்போதும் பலர் விலை போகின்றனர்.
'இண்டியா' கூட்டணி மகத்தான வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சி என கட்சி மாறுகின்றனர். ஆட்சி மாற்றத்துக்கு உழைக்க கட்சியினர் தயாராகுங்கள்.
இவ்வாறு பாரதி பேசினார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மஸ்தான், எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், உதயசூரியன், மணிக்கண்ணன், கவுதம சிகாமணி எம்.பி., உட்பட பலர் பங்கேற்றனர்.