ADDED : நவ 28, 2026 06:35 PM

அ நிறம் | அளவு
செஞ்சி: இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு, செஞ்சியில் அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் திருவண்ணாமலை சாலை ‘பி’ ஏரி அருகே துவங்கி, விழுப்புரம் சாலை கண்மலை தேவாலயம் முன் முடிந்தது.
ஊர்வலத்தில் அரசியலமைப்பின் அடிப்படை தத்துவம், உரிமைகளை வலியுறுத்திச் சென்றனர். முடிவில், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாணவர்கள் வாசித்தனர், தொடர்ந்து, விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
நிகழ்ச்சிகளுக்கு வழக்கறிஞர் லுாா்து சாவியோ தலைமை தாங்கினார். லயோலா கல்லுாரி முதல்வர் அருள், பேராசிரியர் லுாயிஸ் ஆரோக்கியராஜ் பேசினர்.
நிகழ்ச்சியில் பலவை பழங்குடியினர் சொசைட்டி இயக்குனர் ஆரோக்கியசாமி, அகல் மையம் இயக்குனர் மனோஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
