/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி துரிதம்
/
திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி துரிதம்
திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி துரிதம்
திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி துரிதம்
ADDED : நவ 21, 2025 05:14 AM

திண்டிவனம்: திண்டினவம் நகராட்சி பஸ் நிலையத்தில் கட்டட பணிகள் நடப்பதால், பயணிகள் வெளியில் நின்று பஸ் ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சி இந்திரகாந்தி பஸ் நிலையத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த கடைகள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் 4.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தினசரி அங்காடி கட்டுவதற்கான பணி கடந்த ஜூன் மாதம் துவங்கியது.
இந்த பஸ் நிலையத்திற்கு தினந்தோறும், செஞ்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் என 30க்கு மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன.
இதே போல், நுாற்றுக்கு மேற்பட்ட தனியார் பஸ்களும் நகராட்சி பஸ் நிலையத்தை பயன்படுத்தி வந்தன. தற்போது பஸ் நிலையத்தின் உள்ளே பெரும்பகுதி, கட்டட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனால் பெரும்பாலான பஸ்கள் உள்ளே வந்து செல்வதற்கு இடமில்லை என்பதால், பஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.மயிலம் மார்க்கத்தில் செல்லும் அரசு பஸ்கள், டவுன் காவல் நிலையம் எதிரில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

