/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.4.75 கோடியில் தாலுகா அலுவலகம் கட்டும் பணி ஜரூர்! திண்டிவனத்தில் விரைவில் திறக்க ஏற்பாடு
/
ரூ.4.75 கோடியில் தாலுகா அலுவலகம் கட்டும் பணி ஜரூர்! திண்டிவனத்தில் விரைவில் திறக்க ஏற்பாடு
ரூ.4.75 கோடியில் தாலுகா அலுவலகம் கட்டும் பணி ஜரூர்! திண்டிவனத்தில் விரைவில் திறக்க ஏற்பாடு
ரூ.4.75 கோடியில் தாலுகா அலுவலகம் கட்டும் பணி ஜரூர்! திண்டிவனத்தில் விரைவில் திறக்க ஏற்பாடு
ADDED : ஜூலை 22, 2024 01:39 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.4.75 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் திறப்பு விழா நடத்துவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
திண்டிவனம் நேரு வீதியில் தாலுகா அலுவலகம் நுாற்றாண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. குறுகிய, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் செயல்படுகிறது.
இந்த அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், முதியோர் உதவி பெறும் அலுவலகம், கூட்டம் நடக்கும் ஹால் என அனைத்தும் அமைந்துள்ளது.
தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதால், பலர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர்.
பழைமை வாய்ந்த கட்டடம் என்பதால் அடிக்கடி வட்ட வழங்கல் அலுவலகத்தின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து, பணியாளர்களை அச்சுறுத்தி வந்தது.
குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த வசதி இல்லாமல் செயல்படும் தாலுகா அலுவலகத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் அடிப்படை வசதிகளுடன் புதியதாக தாலுகா அலுவலகம் கட்ட வேண்டும் என ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கலெக்டர் உத்தரவில், பொதுப்பணித்துறை சார்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 4.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தாலுகா அலுவலகத்தின் முன்பகுதியிலுள்ள தாசில்தார் அலுவலகம் தவிர, பின்புறம் இருந்த அனைத்து பழைய கட்டடங்களும் இடித்துவிட்டு, புதிதாக இரண்டு மாடிகளுடன் கூடிய அலுவலகத்தை கட்டும் பணி, கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்தது.
தற்போது பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் புதியதாக கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக, வருவாய்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திறப்பு விழாவிற்கு முன், தற்போது முன்பகுதியிலுள்ள பழைய தாசில்தார் அலுவலகம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.