/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டட தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்
/
கட்டட தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்
ADDED : அக் 08, 2025 11:07 PM

விழுப்புரம்: தமிழக கட்டட தொழிலாளர் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் மற்றும் அகில இந்திய அமைப்புசாரா, கட்டட தொழிலாளர் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநிலத்தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் முனுசாமி, மாநில துணைத்தலைவர் மும்மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மாநில பொது செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் பழனிசாமி, பேச்சியப்பன், முத்துவேல் சிறப்புரையாற்றினர்.
இதில், தமிழக அரசு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் வழங்கும் ஓய்வூதிய தொகையை, 1200 ரூபாயிலிருந்து, 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதிய தொகை ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் விஜயலட்சுமி, கோபால், முத்து, சூரியமூர்த்தி, கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.