ADDED : அக் 23, 2024 06:13 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : இந்நிலையில், நேற்று இரவு 9:15 மணிக்கு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் வந்த வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி., திஷாமித்தல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச், கடலுார் எஸ்.பி., ராஜாராம், கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், தினகரன் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
த.வெ.க., மாநாட்டிற்கான இடவசதிகள், பார்க்கிங் வசதிகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், கூட்டத்தை கண்காணித்தல், நெரிசல் ஏற்பட்டால், மாநாடு தொடங்கியதும் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம், திண்டிவனத்தில் வாகனங்களை திருப்பி, மாற்று சாலையில் அனுப்புவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
