/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் 42ம் ஆண்டு கம்பன் விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

ADDED : ஜூன் 06, 2025 06:45 AM

விழுப்புரம்; விழுப்புரம் கம்பன் கழகத்தின் 42ம் ஆண்டு கம்பன் விழா, ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி 3ம் தேதி வரை நடக்க உள்ளது. இவ்விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கம்பன் கழக தலைவர் தனபால் தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில், பொருளாளர் வேங்கடவரதன், துணை செயலர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். விழாக்குழு உறுப்பினர்கள் காங்கேயன், ஐயப்பன், அன்பழகன், பாஸ்கரன், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், இந்தாண்டு நடக்க உள்ள தொடக்க விழாவிற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பங்கேற்க செய்வது, முதல் நாள் எழிலுரை நிகழ்வில் அப்துல்காதர், திருக்கோவிலுார் ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார், சிந்தனை அரங்கம் நிகழ்வில் புலவர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர்.
மூன்றாம் நாள் பட்டிமன்றம் நிகழ்ச்சிக்கு சாலமன் பாப்பையா மற்றும் பேச்சாளர் ராஜா ஆகியோரை அழைத்து நடத்துவது, மேலும், பள்ளி மாணவர்களுக்கு கம்பன் காட்டும் வாழ்வியல் நெறிமுறை என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடத்தவும், சிறந்த தமிழறிஞர்கள் 3 பேரை கவுரவித்து விருது வழங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து, பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.