/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம்
/
உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம்
உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம்
உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம்
ADDED : செப் 22, 2024 02:40 AM

செஞ்சி: செஞ்சி கோட்டையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.
சத்ரபதி சிவாஜியின் ராணுவ கேந்திரங்களாக விளங்கிய 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையை பார்வையிட யுனெஸ்கோ குழுவினர் செஞ்சி வர உள்ளனர்.
அதற்கு முன் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நேற்று செஞ்சி கோட்டையில் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன் முன்னிலை வகித்தார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றினார்.
வரலாற்று ஆர்வலர்கள், ராஜா தேசிங்கு வம்சா வழியினருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். தமிழ் கலாசார அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதீப் சக்கரவர்த்தி, கவுரி, வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், நுால் ஆசிரியர் நடராஜன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
பயிற்சி துணை கலெக்டர் பிரேமி, பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி, விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, துணைச் சேர்மன் ஜெயபாலன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தாசில்தார் ஏழுமலை நன்றி கூறினார்.