/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம்
/
அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஜூலை 15, 2025 09:13 PM

செஞ்சி; அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில், தொகுதியை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், உதவி ஓட்டுப்பதிவு அலுவலர்கள் துரைச்செல்வன், தனலட்சுமி தலைமை தாங்கினார்.
தேர்தல் பிரிவு தாசில்தார்கள் சந்திரமோகன், நூர்ஜகன், தேர்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கருத்துக்களைக் கேட்டு பதிவு செய்தனர்.
ஓட்டுச்சாவடி முகவர்களின் பணி, புதிய வாக்காளர் சேர்த்தல், ஓட்டு பதிவு மையத்தை ஆய்வு செய்தல், இறந்தவர் பெயர்களை நீக்குவது குறித்து விவாதம் நடந்தது.
வருவாய் ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.