/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
/
மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 19, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட செஞ்சி, மயிலம் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், செஞ்சி வட்டார வளமையத்தில் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். தாசில்தார் ஏழுமலை முன்னிலை வகித்தார். தேர்தல் உதவியாளர் சரவணன் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் செல்வகுமார். துறைச்செல்வன், தேர்தல் துணை தாசில்தார்கள் மணிகண்டன், சார்லின் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் குறித்து விளக்கப்பட்டது.

