விழுப்புரம்: தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் குமார் வரவேற்றார். நல்வாழ்வு இயக்கம் மாநில அமைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். மறுவாழ்வு சங்க மாநில தலைவர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, செய்தி தொடர்பாளர்கள் குமார், சந்தோஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் அரசு பணி வழங்குவதோடு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில் இறந்த மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அரசு விரைவாக நிறைவேற்றவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பொது செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்.

