விழுப்புரம் : மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மனு தாக்கல் செய்தவர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், டிசம்பர் 3 இயக்க மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
அவர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் 712 பேர் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக மனு தாக்கல் செய்துள்ளனர். அரசு அலுவலகங்களில் சாய்வு தளம், வீல் சேர் இல்லை. வீல் சேர் இருக்க வேண்டும் என்று அரசாணை இல்லை என அதிகாரிகள் அலட்சியமாக கூறுகின்றனர்.
அரசு அறிவிப்புகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை.100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படவில்லை' என்றார்.
இதில், மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.