நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மகாதேவன், நிதானம், ராஜி, பாலமுருகன் தலைமை வகித்தனர். திண்டிவனம் தாலுகா செயலாளர் மாரியம்மாள், விழுப்புரம் தாலுகா செயலாளர் சங்கர், துணை செயலாளர் தமிழன்பு, வட்ட பொருளாளர் நடராஜன், விழுப்புரம் நகர செயலாளர் வில்சன் காணை ஒன்றிய செயலளர் ராமநாதன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், மணிகண்டன், வசந்தராஜ், சங்கர், டேவிட்ராஜ், ராஜரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழ் மாநில செயலாளர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தீர்க்கப்படாத மக்கள் நல பிரச்னைகள் குறித்தும், அதை நிறைவேற்ற போராடுவது, வரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

