/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம் குறித்து ஆலோசனை
/
கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம் குறித்து ஆலோசனை
ADDED : ஏப் 04, 2025 04:30 AM

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மதுரை ஐகோர்ட், வரும் 21ம் தேதிக்குள், தமிழகம் முழுதும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நகராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் நகராட்சி பகுதியிலுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையில் நடந்தது. நகரமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒரு வாரத்திற்குள் நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என, ஆணையர் அறிவுறுத்தப்பட்டது.