/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் கண்காணிப்பு குழுக்களுடன் ஆலோசனை
/
தேர்தல் கண்காணிப்பு குழுக்களுடன் ஆலோசனை
ADDED : மார் 18, 2024 03:46 AM

விக்கிரவாண்டி : விழுப்புரம் லோக்சபா தேர்தல் நடைமுறைகள் குறித்து தொகுதி கண்காணிப்பு குழுக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தாசில்தார் யுவராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள் வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்தையும், பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தினமும் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
நேர்முக உதவியாளர் சாதிக் பாட்சா, வட்ட வழங்கல் அலுவலர் விமல் ராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், தேர்தல் உதவியாளர் ஜெகதீஷ், தொகுதி நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், வீடியோ கண்காணிப்பு அலுவலர்கள், போலீசார் பங்கேற்றனர்.

