/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காங்., கட்சி அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
/
காங்., கட்சி அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
காங்., கட்சி அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
காங்., கட்சி அமைப்பு மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 27, 2025 04:57 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி நகர, வட்டார காங்., கட்சி அமைப்பு மறு சீரமைப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்.,சார்பில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ஜனார்த்தனன், சுப்பிரமணி, குமரேசன், நடராஜன், நகர இளைஞர் காங்., தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். நகர காங்.,தலைவர் குமார் வரவேற்றார்.
டெல்லி மேலிட காங்., சார்பில் தெலுங்கானா மாநில சட்ட மேலவை குழு உறுப்பினர் பல்மூர் வெங்கட் நிர்வாகிகளுக்கு எதிர்கால கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கி நிர்வாகிகள் அனைவரிடமும் நேர்காணல் செய்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாநில துணை தலைவர் ரங்கபூபதி, நிர்வாகிகள் நடராஜன், சுந்தரமூர்த்தி, சிவா அயினு, அருளப்பன், அய்யனார், தாமோதரன் உள்ளிட்ட வட்டாரத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

