/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2025 04:12 AM

விழுப்புரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அனந்தசயனன், பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். இதில், ரேஷன் கடைகளில் புளுடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்க வேண்டும். அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விற்பனையாளரும், சங்க சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால் பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட துணைத் தலைவர்கள் சேகர், முத்து, இணைச் செயலாளர்கள் ஞானசேகரன், சக்திதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.