/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு வங்கி கடன் சிறப்பு முகாம்
/
கூட்டுறவு வங்கி கடன் சிறப்பு முகாம்
ADDED : டிச 07, 2024 08:04 AM
மரக்காணம்: மரக்காணம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த கடன் வழங்கும் சிறப்பு முகாமில் வியாபாரிகள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் மரக்காணம் பகுதியில் உள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இதனால் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வியாபாரிகளுக்கு கடன் வழங்க கிளை வங்கிகளில் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
அதன் பேரில் நேற்று மரக்காணம் மத்திய கூட்டுறவு கிளை வங்கியில் கடன் பெருவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் வியாபாரிகள் கடன் வாங்குவது குறித்து அதிகாரிகளிடம் தகவல் கேட்டபோது, 'கடன் வழங்குவது குறித்து எந்த ஆணையும் இதுவரை வரவில்லை. எவ்வளவு கடன் வழங்குவது என்ற தகவலும் சரியாக கொடுக்கவில்லை.
இதனால் வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் தொகை குறித்து இப்போது சொல்லமுடியாது. சாலையோரத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என தெரிவித்தனர்.
கடன் பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாலும், முறையாக முன்னறிவிப்பு செய்யாததாலும், சிறப்பு முகாமில் அதிகளவில் வியாபாரிகள் பங்கேற்கவில்லை.