/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவுத்துறை பொங்கல் தொகுப்பு விற்பனை துவக்கம்
/
கூட்டுறவுத்துறை பொங்கல் தொகுப்பு விற்பனை துவக்கம்
ADDED : டிச 27, 2024 11:31 PM

விழுப்புரம், ; விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை துவங்கியது.
தமிழக முதல்வர் உத்தரவின்படி, கூட்டுறவுத் துறை சார்பில், பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதன்படி, ரூ.199க்கான இனிப்பு பொங்கல் தொகுப்பு, ரூ.499க்கான கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.999 க்கான பெரும் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பொங்கல் தொகுப்பு விற்பனையை, விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி துவக்கி வைத்தார். மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கண்ணன் உடனிருந்தார்.