ADDED : ஜூன் 29, 2026 11:05 PM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தயாளன் ஆகியோர் தலைமை தாங்கி கூட்டுறவு கொடியேற்றி உறுதிமொழியேற்று, வார விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.
அப்போது, சரக துணைப்பதிவாளர்கள் ராகினி, ஜீவிதா, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்குமார், பயிற்சி துணைப்பதிவாளர்கள் ஜீவா மற்றும் மவுனிகா உட்பட துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
