/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கலைக்கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு
/
அரசு கலைக்கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : நவ 01, 2024 06:23 AM

வானூர்: வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயர் கல்வி துறையின் (மனித வள மேலாண்மை துறையின்) வழிகாட்டுதலின் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க கடைபிடிக்கப்பட்டது.
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அருளமுதம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் காந்திமதி நன்றி கூறினார்.