/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் ஒன்றிய கூட்டம் கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு
/
வானுார் ஒன்றிய கூட்டம் கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு
வானுார் ஒன்றிய கூட்டம் கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு
வானுார் ஒன்றிய கூட்டம் கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு
ADDED : ஏப் 24, 2025 05:29 AM

வானூர்: வானூர் ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் உஷா முரளி தலைமையில் நேற்று நடந்தது.
பி.டி.ஓ.,க்கள் சுபாஷ்சந்திரபோஸ், மணிவண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் மகேந்திரவர்மன், குகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒவ்வொரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வந்தது. குறுக்கிட்டு பேசிய வி.சி., கவுன்சிலர் கல்பனா பொன்னிவளவன், கலைஞர் வீடு கட்டும் திட்டம், கவுன்சிலர்கள் மூலம் பயனாளிகளுக்கு சென்றடையவில்லை என்றார்.
அதை தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர் கணேசன், ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்கள் மூலமாக கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார். பதிலளித்த ஒன்றிய சேர்மன், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகள் குறித்து என்னுடைய கவனத்திற்கே கொண்டு வரவில்லை. பி.டி.ஓ.,க்கள் முடிவெடுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் வழங்கி விட்டனர். என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது என கூறினார்.
இதனால் கோபமடைந்த அ.தி.மு.க., கவுன்சிலர் கணேசன், உங்களுக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள் என ஆவேசமாக பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் பி.டி.ஓ., மணிவண்ணன் எழுந்து, கவுன்சிலர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.