/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் 2ம் தேதி கலந்தாய்வு துவக்கம்
ADDED : மே 31, 2025 01:02 AM
விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 2ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது.
எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இக்கல்லுாரிக்கு 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 1000 இடங்களுக்கு, 24,778 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 2ம் தேதியும், பொது கலந்தாய்வு வரும் 5ம் தேதி நடக்கிறது.
2ம் தேதி சிறப்பு பிரிவுக்கும், 5ம் தேதி இரண்டு சுழற்சிகளுக்கும் தமிழ் பாடப்பிரிவுக்கும், 6ம் தேதி முதல் சுயற்சிக்கு ஆங்கிலம் பாடப்பிரிவுக்கும், 7ம் தேதி வணிகவியல், 9ம் தேதி வேதியியல், கணினி அறிவியல், கணிதம், புள்ளியியல், 10ம் தேதி பொருளியல், வரலாறு, சமூகப்பணித்துறை, 11ம் தேதி வேதியியல், கணினி அறிவியல், கணிதம், புள்ளியியல் மற்றும் 12ம் தேதி பொருளியல், வரலாறு, சமூகப்பணித்துறைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
குறித்த நேரத்திற்கு பிறகு வருபவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். சேர்க்கைக்கு வரும்போது அசல் சான்றிதழ் அனைத்தும் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.